இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்
181Shares
181Shares
lankasrimarket.com

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

ஜூலை 3ஆம் திகதி டி20 தொடரும், ஜூலை 12ஆம் திகதி ஒருநாள் தொடரும் துவங்க உள்ளது.

ஒருநாள் தொடர் விபரம்
 • முதல் ஒருநாள் போட்டி - 12ஆம் திகதி (நாட்டிங்காம்)
 • 2வது ஒருநாள் போட்டி - 14ஆம் திகதி (லண்டன்)
 • 3வது ஒருநாள் போட்டி - 17ஆம் திகதி (லீட்ஸ்)

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தசைப்பிடிப்பு காரணமாக, அவுஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதே தொடரில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்படவில்லை.

14 பேர் கொண்ட இந்த அணிக்கு இயான் மோர்கன் அணித்தலைவராக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விபரம்
 1. இயான் மோர்கன் (அணித்தலைவர்)
 2. மொயின் அலி
 3. பேர்ஸ்டோவ்
 4. பென் ஸ்டோக்ஸ்
 5. ஜேக் பால்
 6. ஜோஸ் பட்லர்
 7. ஜேசன் ராய்
 8. அடில் ரஷித்
 9. ஜோ ரூட்
 10. டேவிட் வில்லே
 11. மார்க் வுட்
 12. லியாம் பிளங்கெட்
 13. டாம் கர்ரான்
 14. அலெக்ஸ் ஹால்ஸ்
Twitter

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்