பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியிடம் தவறாக நடந்துகொண்ட பாடகரின் தந்தை

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
209Shares
209Shares
lankasrimarket.com

பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லியின் மனைவியிடம், பாலிவுட் பாடகர் அன்கிட் திவாரியின் தந்தை தவறாக நடந்துகொண்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்லி, தந்து மனைவி ஆண்ட்ரியாவுடன் மும்பையிலுள்ள Inorbit Mall-க்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்.

அங்கு பிரபல பாலிவுட் பாடகர் அன்கிட் திவாரியின் தந்தை, தன்னுடைய மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மும்பை போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வினோத் காம்ப்லி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து வினோத்திடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்கையில், மாலில் முதியவர் ஒருவர் திடீரென என்னுடைய மனைவியின் கையை பிடித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன எனது மனைவி உடனடியாக அவரை தள்ளிவிட்டார். இதனையடுத்து அங்கு வந்த இருவர், எனது மனைவியை தாக்க முயன்றனர் என கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து அன்கிட் திவாரியின் சகோதரர் அன்குர் கூறுகையில், என்னுடைய தந்தை ராஜ்குமாரை நோக்கி செருப்பை காட்டி அடித்து விடுவதாக மிரட்டியதோடு, தகாத வார்த்தைகள் திட்டிக்கொண்டே திடீரென தாக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் என்னுடைய தந்தை அதிர்ச்சியில் உறைந்திருப்பதை பார்த்து, நான் காவல்துறைக்கு தகவல் கொடுக்க முயன்றேன். உடனே வினோத் காம்ப்லி என்னுடைய செல்போனை பறித்து தூக்கி எறிந்தார் என தெரிவித்துள்ளார்.

இருவரின் வாக்குமூலங்களுமே வித்யாசமாக இருப்பதால் குழப்பத்தில் இருக்கும் காவல்துறையினர், அன்குர் திவாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண்ட்ரியா மற்றும் அவரது கணவர் வினோத் காம்ப்லி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இருதரப்பில் யாரையும் காவல்துறையினர் கைது செய்யாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்