சர்வதேச அளவில் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், டி20 போட்டிகளில் 100 ஆட்டங்கள் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் பாகிஸ்தான்-அவுஸ்திரேலியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி தற்போது ஹராரேவில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்(36) இடம்பித்துள்ளார்.

இது இவருக்கு 100வது டி20 போட்டி என்பதால், சர்வதேச அளவில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சோயிப் மாலிக், கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்.

இன்றைய போட்டியில் 13 ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்த மாலிக், இதுவரை 2039 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அத்துடன் பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மாலிக்கிற்கு அடுத்தபடியாக ஷாகித் அப்ரிடி (99 போட்டிகள்), டோனி (90 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers