உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்!

Report Print Kabilan in கிரிக்கெட்
375Shares
375Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில், இன்று அவுஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச், ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.

22 பந்தில் அரைசதம் அடித்த பிஞ்ச், 50வது பந்தில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் ஆர்கி ஷார்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

AFP

எனினும், தொடர்ந்து சரவெடியாய் வெடித்த பிஞ்ச் 71 பந்துகளில் 160 ஓட்டங்கள் எடுத்தபோது, சர்வதேச டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

அதன் பின்னர், தொடர்ந்து விளையாடிய அவர் 76 பந்துகளில் 16 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 172 குவித்து ஆட்டமிழந்தார். ஆர்கி ஷார்ட் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

AP

அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய ஜிம்பாப்வே அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. அந்த அணியில் சாலமன் மிரே அதிகபட்சமாக 28 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் அவுஸ்திரேலியா 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா தரப்பில் டை 3 விக்கெட்டுகளும், ஆகர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்