இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் புரட்டி எடுத்த இந்தியா: சாதனை படைத்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்
440Shares
440Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்தனர்.

அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

அதன் பின் வந்த வீரர்கள் குல்தீப் யாதவ் தனது சுழல் பந்தில் சீக்கிரமாக வெளியேற்றினார்.

இதனால் அந்தணி 107 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுக்ள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.

பட்லரின் அதிரடியால் 150 ஓட்டங்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இறுதியாக 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 160 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடியில் தவான் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த ராகுல், சர்மாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரோகித் சர்மா 32 ஓட்டங்களில் அவுட்டானார்.

இறுதியில், இந்திய அணி 18.2 ஓவரில் 163 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். லோகேஷ் ராகுல் 101 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி 9 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இரண்டாயிரம் ஓட்டங்க்ளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்