தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்கள்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
147Shares
147Shares
lankasrimarket.com

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் TNPL போட்டிகளில் இந்தாண்டு வெளிமாநில வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டிகள் வருகிற 11ம் திகதி முதல் ஆகஸ்ட் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில், இந்தாண்டு வெளிமாநில வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

ஒவ்வொரு அணிக்கும் இரண்டு வீரர்கள் என்ற ரீதியில் மொத்தம் 16 பேர் விளையாடவுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் ஆர்ஐ பழனி தெரிவித்துள்ளார்.

இதில் விதிமுறைகளாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கக்கூடாது, 2018 ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் இடம்பெற்றிருக்கக்கூடாது, சொந்த மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மொத்தம் 112 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம்,

  • ஜோன்ஸ் துடி நாட்டு பேட்ரியாட்ஸ் – ஷெல்டன் ஜாக்சன் மற்றும் சல்மான் நிஜார்
  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – கேதர் தேவ்தார் மற்றும் ஷாரியா சானந்தியா.
  • லைகா கோவை கிங்ஸ் – தர்மேந்திர ஜடேஜா மற்றும் ஷோராப் தாலிவால்
  • மதுரை பேந்தர்ஸ் – அமித் வர்மா மற்றும் ரீபீ கோமஸ்
  • ரூபி திருச்சி வாரியர்ஸ் – ஹிமாத் சிங் மற்றும் லூக்மன் மெரிவாலா
  • காஞ்சி வீரண்ஸ் – ஸ்வப்னிங் சிங் மற்றும் சந்தீப் வார்ரியர்
  • திண்டுக்கல் டிராகன்கள் – அர்பித் வாசுவாடா மற்றும் ஹனுமா விகார்
  • iDream காரைக்குடி கால்வாய் – ஆதித் ஷெத் மற்றும் உண்முட் சந்த்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்