டோனியை அசர வைத்த சுட்டித் தமிழனின் சாதனை: ஆச்சரிய வீடியோ உள்ளே

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
487Shares
487Shares
lankasrimarket.com

சென்னையை சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சனுஷ் சூர்யதேவ், Asian Book Of Recordsல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான்.

சென்னையைச் சேர்ந்த முருகன்- சுபத்ரா தம்பதியின் மகன் சனுஷ் சூர்யதேவ். வெறும் இரண்டரை வயதில் சனுஷ் கிரிக்கெட் விளையாடும் திறமையை பார்த்து விட்டு, ஆசிய சாதனை புத்தகமான India Book of The Records, ‘Young Child Cricketer' என்ற விருதினை சிறுவனுக்கு வழங்கியது.

இந்நிலையில் தற்போது Asia Book Of Record-லும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான்.

இடது கை மட்டையாளரும், பந்து வீச்சாளருமான சனுஷ் விளையாட்டு திறமையை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியும் பாராட்டியது நினைவுக்கூரத்தக்கது.

இதுகுறித்து முருகன் கூறுகையில், சனுஷ் ஐந்து மாத குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து விளையாடுவான்.

அதோடு மட்டுமில்லாமல் அதிகமாக கிரிக்கெட் விளையாட்டை பார்த்து மகிழ்வான். அவனுக்கு ஒரு வயது நடக்கும்பொழுதே ‘Drive' ஷாட்டுகளை மிக அற்புதமாக விளையாடினான்.

அவனை ஊக்குவித்து ஆதரவளிப்பதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்