அவுஸ்திரேலிய அணியை பழிதீர்த்த பாகிஸ்தான்: அபார வெற்றி

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் டி20 முத்தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.

இதில் ஹராரேயில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களே எடுத்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முந்தைய லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்