இந்திய அணியை ஆட்டம் காண வைத்த இங்கிலாந்து: ஹெல்ஸ் அதிரடியால் பதிலடி கொடுத்து அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்
307Shares
307Shares
lankasrimarket.com

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கார்டிப்பில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 5, ஷிகர் தவான் 10, லோகேஷ் ராகுல் 6 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பியதால், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்கள் எடுத்தது தத்தளித்து கொண்டிருந்தது.

அதன் பின் வந்த கோஹ்லி மற்றும் ரெய்னா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் எண்ணிக்கை ஆமை வேகத்தில் நகர்ந்தது.

அணியின் எண்ணிக்கை 79 ஓட்டங்கள் இருந்த போது ரெய்னா 27 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த டோனி, கோஹ்லியுடன் சேர்ந்து விளையாடினார்.

ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி கோஹ்லி 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறியவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் வில்லி, பால், பிளங்கெட், ரஷித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ராய் 15, பட்லர் 14 ஓட்டங்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ரூட் 9, மோர்கன் 17 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கை ஓங்கியது. இருப்பினும் ஹேல்ஸ், பெயர்ஸ்டோ இணை சிறப்பாக விளையாடி, அணிக்கு வலுவான அடித்தளம் கொடுத்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹெல்ஸ் 58 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டிக்கு அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து அணி 1-1 என சமன் செய்துள்ளது.

மூன்றாவது டி20 வரும் 8-ஆம் திகதி பிரிஸ்டோலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்