தோனியின் பேச்சை கேட்காமல் அசிங்கப்பட்ட விராட்கோலி... வைரலாகும் வீடியோ!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
538Shares
538Shares
lankasrimarket.com

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியின்போது, தோனியின் பேச்சை கேட்காமல் வேகமாக ரிவியூ கேட்ட விராட்கோலிக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இரண்டு அணிகளுமே தொடரில் சமமான நிலையில் உள்ளன.

இரண்டாவது போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் எடுத்து 149 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக வைத்தது. இதனை நோக்கி சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இங்கிலாந்து அணி, 57 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.

அப்பொழுது 10-வது ஓவரை வீசிக்கொண்டிருந்த குல்தீப் யாதவ், தான் வீசிய 5-வது பந்து அலெக்ஸ் ஹெல்சின் காலில் பட்ட நடுவரிடம் அவுட் கேட்டார். ஆனால் அதற்கு நடுவர் மறுப்பு தெரிவிக்கவே, உடனடியாக ரிவியூ கேட்குமாறு விராட்கோலியிடம் கூறினார். ஆனால் அது லெக் ஸ்டெம்பிற்கு வெளியில் சென்று விடும் என தோனி கூறியும் கூட அதனை காதில் வாங்காத விராட்கோலி, உடனடியாக குல்தீப் பேச்சை கேட்டுக்கொண்டு ரிவியூ கேட்டார்.

தோனி கூறியபடியே பந்து லெக் ஸ்டெம்பிற்கு வெளியில் சென்றதால், விராட்கோலிக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்தது. இந்த காணொளியானது தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக பரபரப்பப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்