இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த டோனி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
333Shares
333Shares
lankasrimarket.com

இங்கிலாந்து, இந்தியா அணிக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பிரிஸ்ச்டோலில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்களை எடுத்தார். இது டி20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அவர் எடுத்துள்ள அதிக விக்கெட்டுகளாகும்.

சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளும், சாஹர் மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும், 5 கேட்சுகளை பிடித்து டோனி உலக சாதனை படைத்துள்ளார்.

இது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கீப்பர் பிடித்த அதிக கேட்சுகளாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்