இங்கிலாந்து அணியுடனான தொடரை வென்றது எப்படி? பெருமையாக கூறிய கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்
360Shares
360Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது போட்டியின் வெற்றிக்கு பின் கோஹ்லி கூறுகையில், எங்கள் அணியின் பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 225 முதல் 230 ஓட்டங்கள் வரை எடுக்கும் என்று நினைத்தேன்.

அது மிகவும் கடினமான இலக்கு எனவும் யோசித்தேன். ஆனால் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

அதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த ஆல் ரவுண்டர், பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் அவரது திறன் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.

இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெளிப்படுத்த விரும்புகிறோம். இங்கிலாந்து அணியுடனான இந்த கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளதால் பெருமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்