சதம் அடிக்கும் போது மனைவி இல்லை: தினேஷிடம் கலங்கிய ரோகித்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
240Shares
240Shares
lankasrimarket.com

சதம் அடித்த போது மனைவி இல்லாமல் இருந்ததை எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் ரோகித் பதிலளித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் ரோகித் ஷர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை பறித்துக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி கிண்ணத்தை வென்றது.

போட்டி முடிந்த பின்னர் தினேஷ் கார்த்திக், ரோகித் ஷர்மாவிடம் பேட்டி எடுத்தார். அப்போது கேள்வி கேட்ட தினேஷ்,

ரிதிகா (ரோகித் மனைவி) மைதானத்தில் இருந்தால் நீங்கள் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் ரிதிகா இல்லாமல் இந்த முறை சதம் அடித்துள்ளீர்கள். நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள், தனிமையில் இருப்பதை போன்றா? என்றார்.

அதற்கு பதிலளித்த ரோகித், ஆமாம். எனக்கு கண்டிப்பாக தெரியும், எனது ஆட்டத்தை ரிதிகா டிவியில் பார்த்திருப்பார் என்று.

இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வந்துவிடுவார். ஆனால் அவரும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் போட்டியை பார்த்திருப்பார்.

அவர் இங்கு இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் அதுமுடியாமல் போய்விட்டது.

பரவாயில்லை நாம் ஜெயித்துவிட்டோம். அத்துடன் இனி வரும் போட்டிகளில் ரிதிகா இருப்பார் என்று வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் பதிலளித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்