டி20 புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு: ஆச்சரியப்படுத்திய இந்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
383Shares
383Shares
lankasrimarket.com

டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 172 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்த அவுஸ்திரேலிய அணி தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முத்தரப்பு தொடரில் 278 ஓட்டங்கள் சேர்த்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 2-வது இடத்தை பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்துக்கு முதல் முறையாக முன்னேறி அசத்தியுள்ளார்.

நான்காவது இடத்திலும் நியூசிலாந்தின் கோலின் முன்ரோவும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.

இப்பட்டியலின் முதல் பத்து இடங்களில் ஒரு இலங்கை வீரர் கூட இடம்பெறவில்லை.

குசல் பெரேரா 19-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்