இந்தியா எங்களை தண்டித்தது: இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன்

Report Print Kabilan in கிரிக்கெட்

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணி தங்களை தண்டித்ததாக இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடர் நேற்று முடிவடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்நிலையில், தொடரை வென்றது குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் கூறுகையில்,

‘சிறப்பான ஆட்டம். இது எங்கள் பந்துவீச்சாளர்களால் சாத்தியமானது. வுட் மற்றும் வில்லி சிறப்பாக விளையாடினர். நாங்கள் வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டோம். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்திய அணி 300 அல்லது 320 ஓட்டங்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன். அதை எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தி விட்டனர். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணி எங்களை தண்டித்தது. ஆனால், அதன் பின்னர் நாங்கள் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இதனால் நாங்கள் ஒரு திறமை வாய்ந்த அணியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்