தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய சச்சினின் மகன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய U-19 அணி இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கொழும்புவில் துவங்கியது.

இந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமானார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதல் ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர் வீசினார். ஆனால், முதல் ஓவரில் அவரால் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து, தான் வீசிய அடுத்த ஓவரில் இலங்கையின் கமில் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஜூன். இதன் மூலம், தனது திறமையை அவர் நிரூபித்துள்ளார்.

AFP
AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்