இந்திய அணியை அடிச்சு துவம்சம் பண்ணிட்டேன்! பேட்டை கீழே போட்டு செய்கை செய்த இங்கிலாந்து வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான இங்கிலாந்து வீரர் ரூட் பேட்டை கீழே போட்டு செய்கை செய்த செயல் தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் என மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 போட்டியை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியது.

ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வீரரான ரூட் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்த பின்பு, இந்திய அணியை வீழ்த்திவிட்டோம் என்பது போல், தன்னுடைய பேட்டை கீழே போட்டு செய்கை செய்தார்.

இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers