டெஸ்ட் அணியில் இடமில்லை! இந்திய அணியின் தேர்வுக் குழுவை குத்தி காட்டிய அதிரடி மன்னன் ரோகித்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மறைந்தாலும் சூரியன் நாளை உதிக்கும் என்று இந்திய அணியின் தேர்வுக் குழுவை குத்திக் காட்டியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) , ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) என கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இத்தொடரின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

அதில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மாவின் இடம் பெறவில்லை.

இதனால் ரோகித் இந்திய அணியின் தேர்வு குழுவை குத்தி காட்டும் வகையில், மறைந்தாலும் மறுநாள் சூரியன் உதிக்கு என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரோகித் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் கவலையில்லை என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்