இம்ரான் கான் பிரதமரானால் பாகிஸ்தான் ஆசிய புலியாக மாறும்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானை ஆசிய புலியாக மாற்றும் திறமை இம்ரான் கானுக்கு உள்ளதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், அந்நாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் ஆட்சியமைக்கும் நிலை அங்கு உருவாகியுள்ளதால், பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் உருவெடுக்கவுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ஆதரவினை இம்ரான் கானுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் இம்ரான் கான் பக்கம் நிற்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தானை ஆசிய புலியாக மற்றும் திறமை அவருக்கு மட்டும் தான் உள்ளது.

பி.டி.ஐ கட்சியினருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக, பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...