இங்கிலாந்து தொடரில் கோஹ்லிக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு: சாதனை படைப்பாரா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 1-ஆம் திகதி துவங்கவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி 903 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் முதல் இடம் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணியின் தலைவரான ஸ்மித் ஐசிசி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 929 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

ஸ்மித் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஓராண்டு தடையில் உள்ளதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோஹ்லி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 920 புள்ளிகளுக்கு மேல் குவித்து சாதனைப் படைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்