இங்கிலாந்தின் 1000வது டெஸ்ட்! இதுவரை படைத்த சாதனைகள்

Report Print Kabilan in கிரிக்கெட்

கடந்த 1877ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, தனது 1000வது டெஸ்டில் நாளை விளையாட உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு ஆயிரமாவது போட்டியாகும். இதன்மூலம், 1000 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இதுவரை வெற்றி பெற்றுள்ள போட்டிகள் மற்றும் இங்கிலாந்து வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடியவர், விக்கெட் வீழ்த்தியவர்கள் குறித்து இங்கு காண்போம்.

மொத்த டெஸ்ட்கள்

இங்கிலாந்து அணி இதுவரை 999 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அவற்றில் 510 போட்டிகள் உள்ளூரிலும், 483 டெஸ்ட்கள் வெளிநாடுகளிலும், 6 டெஸ்ட்கள் பொதுவான நாடுகளிலும் விளையாடியுள்ளது.

வெற்றிகள்

இங்கிலாந்து அணி 357 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் 213 வெற்றிகள் உள்ளூரிலும், 144 டெஸ்ட்களில் வெளிநாட்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

தோல்விகள்

297 டெஸ்ட்களில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது. அவற்றில் 119 போட்டிகள் உள்ளூரிலும், 173 போட்டிகள் வெளிநாட்டிலும், 5 போட்டிகள் பொதுவான நாடுகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

டிரா

இங்கிலாந்து 345 டெஸ்ட்களை டிரா செய்துள்ளது. அவற்றில் 166 டெஸ்ட்களை வெளிநாட்டிலும், 178 டெஸ்ட்களை உள்ளூரிலும், ஒரு டெஸ்ட்டை பொதுவான நாட்டிலும் டிரா செய்துள்ளது.

இங்கிலாந்தின் வெற்றி விகிதம்
  • வங்கதேசம் - 90 சதவிதம்
  • ஜிம்பாப்வே - 50 சதவிதம்
  • நியூசிலாந்து - 46.6 சதவிதம்
  • தென் ஆப்பிரிக்கா - 40.9 சதவிதம்
  • இலங்கை - 38.7 சதவிதம்
  • இந்தியா - 36.8 சதவிதம்
  • அவுஸ்திரேலியா - 31.2 சதவிதம்
  • மேற்கிந்திய தீவுகள் - 31.2 சதவிதம்
  • பாகிஸ்தான் - 30.1 சதவிதம்
இங்கிலாந்து அணியில் அதிக டெஸ்ட்களில் விளையாடிய வீரர்கள்

அலெஸ்டர் குக் - 156

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 138

அலெக் ஸ்டீவர்ட் - 133

இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிரஹாம் கூச் - 118

டேவிட் கோவர் - 117

அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள்

அலெஸ்டர் குக் - 32 சதங்கள்

கெவின் பீட்டர்சன் - 23 சதங்கள்

ஹேமண்ட், காலின் கௌவ்டிரே, பாய்காட், இயான் பெல் - 22 சதங்கள்

அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

அலெஸ்டர் குக் (156) - 12,145

கிரஹாம் கூச் (118) - 8900

அலெக் ஸ்டீவர்ட் (133) - 8463

டேவிட் கோவர் (117) - 8231

கெவின் பீட்டர்சன் (104) - 8181

Jason O'Brien/PA
அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் (138 போட்டிகள்) - 540 விக்கெட்டுகள்

ஸ்டூவர்ட் பிராட் (118 போட்டிகள்) - 417 விக்கெட்டுகள்

இயான் போத்தம் (102 போட்டிகள்) - 383 விக்கெட்டுகள்

பாப் வில்லிஸ் (90 போட்டிகள்) - 325 விக்கெட்டுகள்

ஃபிரெட் ட்ரூமேன் (67 போட்டிகள்) - 307 விக்கெட்டுகள்

அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள்

ஆலன் நாட் (95 போட்டிகள்) - 250

மாட் பிரியர் (79 போட்டிகள்) - 243

அலெக் ஸ்டூவர்டு (82 போட்டிகள்) - 227

காட்ஃரே ஈவன்ஸ் (91 போட்டிகள்) - 173

பாப் டெய்லர் (57 போட்டிகள்) - 167

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்