கோஹ்லி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும்: முன்னாள் வீரர் வாகன் அதிரடி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணி மிகவும் கோபத்துடன், விராட் கோஹ்லி அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகள் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த தொடர் குறித்து அவர் கூறுகையில், ‘ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெட்டிங்லேயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றது போல, விராட் கோஹ்லி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும் என்று அணியிடம் வலியுறுத்த வேண்டும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஹெட்டிங்லே 2வது டெஸ்டின் முதல் நாளில் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று வீரர்களிடம் கூற வேண்டும். சில வேளைகளில் அணியின் விவாதத்தின்போது இப்படி செய்ய இயலாது.

சில நேரங்களில் ஒவ்வொரு வீரரிடம் பேசும்போது அதற்கு பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வீரரிடமும் சென்று, பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் விளையாட லீட்ஸிற்கு ஏன் தீவிர நோக்கத்துடன் வந்தீர்கள்? என்று கேட்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து, தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ரஷித் விவகாரம் இதற்கு உதவும்.

இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும், மனநிலையில் அதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எழுச்சி பெற்று, கோஹ்லியின் Front Foot ஆட்டத்திற்கு சவால் கொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers