இந்த அடி போதுமா? இனி யாராவது வாய் பேசுவீங்க! பேசிய வாய்க்கு பூட்டு போட்ட கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் கோஹ்லி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்தாடிய இந்திய அணியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வீரர்கள் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினாலும், கோஹ்லி மட்டும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு சதம் அடித்து 149 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற

இந்திய அணி இறுதியாக 274 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தற்போது சதம் அடித்து அசத்தியுள்ள கோஹ்லி, கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 10 இன்னிங்சையும் சேர்த்து 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் கோஹ்லியின் ஆட்டம் இந்த முறையும் அப்படி தான், இந்திய மண்ணில் கோஹ்லி அடிக்கலாம், ஆனால் இங்கிலாந்து மண்ணில் சொதப்புவார் என்று விமர்சனம் எழுந்தது.

தற்போது அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் கோஹ்லி சதம் அடித்து பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்