இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது எப்படி? ரகசியம் உடைத்த அஸ்வின்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது எப்படி என்று தெரிவித்துள்ளார்.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர், இந்தியா 274 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனதால், இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதிலும், தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதமான இந்த ஆடுகளத்தில், அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘கடந்த ஒன்றரை ஆண்டுடாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் அதிக நேரம் விளையாடி இருக்கிறேன். இங்கு வந்ததும் பந்து வீசும் வேகத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன்.

அதற்கு ஏற்றாற்போல் பந்து வீசினேன். எனது பந்து வீச்சு முறையில் சிறிது மாற்றத்தை எளிமையாக செய்து வீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்