ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இலங்கையின் இளையோர் அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

U-19 இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா- இலங்கை இடையேயான 2வது ஒருநாள் நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி 47 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சுருண்டது. பவன் ஷா 49 ஓட்டங்களும், ஆயுஷ் பதோனி 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் துல்ஷான் 3 விக்கெட்டுகளையும், நிர்மல் பெர்னாண்டோ, நவோத் பரணவிதான மற்றும் மனசிங்கே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களான பரணவிதான 4 ஓட்டங்களிலும், மதுஷ்கா 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நிபுன் தனஞ்ஜெய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு பக்கபலமாக விளையாடிய சூரியபந்தர 71 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நிபுன் தனஞ்ஜெய 112 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் அஜய் தேவ் கௌட், சித்தார்த் தேசாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்