அதி விரைவாக 7000 ஓட்டங்கள்: சாதனை மேல் சாதனை படைக்கும் கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, அதி விரைவாக 7000 எடுத்த அணித்தலைவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்சில், விராட் கோஹ்லி 149 ஓட்டங்கள் குவித்தார். 40 ஓட்டங்களை கோஹ்லி எடுத்தப்போது, சர்வதேச அளவில் அதி விரைவாக 7000 ஓட்டங்களை குவித்த அணித்தலைவர் என்கிற சாதனையை படைத்தார்.

இதுவரை 105 டெஸ்ட்களில் விளையாடியுள்ள கோஹ்லி, 124 இன்னிங்ஸ்களில் 7000 ஓட்டங்களை கடந்துள்ளார். இதற்கு முன்பு, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா 164 இன்னிங்ஸ்களில் 7000 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

அதி விரைவாக 7000 ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர்கள்
  • விராட் கோஹ்லி (இந்தியா) - 124 இன்னிங்ஸ்
  • பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) - 164 இன்னிங்ஸ்
  • ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 165 இன்னிங்ஸ்
  • மைக்கேல் கிளார்க் (அவுஸ்திரேலியா) - 166 இன்னிங்ஸ்
  • அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) - 171 இன்னிங்ஸ்
  • அசாருதீன் (இந்தியா) - 193 இன்னிங்ஸ்
  • சவுரவ் கங்குலி (இந்தியா) - 194 இன்னிங்ஸ்
  • டோனி (இந்தியா) - 198 இன்னிங்ஸ்
  • அர்ஜூனா ரணதுங்கா (இலங்கை) - 222 இன்னிங்ஸ்
  • ஸ்டீபன் பிளம்மிங் (நியூசிலாந்து) - 224 இன்னிங்ஸ்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்