கோஹ்லி சிறந்த வீரர் இல்லை.. இப்படி தான் அவுட்டாக்குவோம்! கர்வமாக பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவின் மற்ற துடுப்பாட்ட வீரர்கள் மூலம் கோஹ்லிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ஓட்டங்களும் எடுத்தார்.

கோஹ்லியை தவிர மற்ற வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சொதப்பி வருகின்றனர்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு ஒரே தலைவலியாக இருப்பது கோஹ்லி மட்டும் தான், அவரையும் எப்படி அவுட்டாக்குவோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், விராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் இல்லை. அந்த நிலையை நெருங்கி வருகிறார்.

முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் கோஹ்லி விளையாடியது உயர்தர ஆட்டம். இந்திய அணியின் மற்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தால், அது கோஹ்லியிடம் சென்று அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும், இதன் மூலம் அவர் விரைவில் அவுட்டாவார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்