இந்திய அணி மட்டுமில்லை..யாராக இருந்தாலும் இதே நிலை தான்! கர்வமாக பேசிய இங்கிலாந்து வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

லார்ட்ஸ் ஆடுகளத்தில் யாராக இருந்தாலும், இதே நிலமைதான் என்று இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஆண்டர்சன், இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மட்டும் எங்களது பந்துவீச்சில் திணறியதாக நினைக்கவில்லை.

இந்த ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி உலகின் எந்த அணியின் துடுப்பாட்ட வரிசையையும் எங்களால் சரித்துவிடமுடியும்.

எங்கள் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நாங்கள் பந்துவீசினாலும் இதேதான் நடந்திருக்கும். பவுலிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நன்றாக பந்துவீசவில்லை என்றால், மிகவும் மனக்கஷ்டமாக இருந்திருக்கும் என ஆண்டர்சன் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...