இந்திய அணியை வீழ்த்தியதற்கு இவர்கள் தான் முக்கிய காரணம்: இங்கிலாந்து வீரர் வோக்ஸ் புகழாரம்

Report Print Santhan in கிரிக்கெட்
352Shares
352Shares
ibctamil.com

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு பந்து வீச்சாளர்களே முக்கிய காரணம் என்று அந்தணி வீரர் வோக்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களான் பாரிஸ்டோவ் 93 ஓட்டங்களும், வோக்ஸ் 137 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டாகமலும் இருந்தார்.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற கிறிஸ் வோக்ஸ் கூறுகையில், இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் நானும் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது.

மழை காரணமாக ஒருநாள் முழுவதையும் இழந்திருந்தாலும் வெறும் நான்கே நாளில் போட்டி முடிவடைந்தது தனிச்சிறப்பு.

இந்த போட்டியில் சதம் அடித்தது எனக்கு கிடைத்த கவுரவம். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அபாரமாக பந்துவீசினார்கள்.

அவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

துடுப்பாட்டத்தில் பரிஸ்டோவ் அபாரமாக விளையாடினார், இந்த போட்டியில் என்னை நிதானமாக விளையாடுமாறு பாரிஸ்டோவ் அறிவுறுத்தினார்.

இது வழக்கத்திற்கு மாறானது வழக்கமாக நான் தான் அவரை பொறுமையாக விளையாடுமாறு அறிவுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்