இந்திய அணியை கடுமையாக விமர்சித்த காம்பீர்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் மீது தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் கூறுகையில், ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸ்களும் இந்திய அணிக்கு சற்று கடினமாக இருந்தது.

ஆனாலும் அதில் இருந்து மீள இந்திய அணி எவ்வித போராட்டத்திலும் ஈடுபடாமல் ஆட்டம் மூன்று நாட்களிலேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கடைசி வரை போராடி இருக்க வேண்டும், இனி இந்தியாவால் தொடரை கைப்பற்றுவது கடினம்.

எனினும் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவித்தால் தோல்வியிலிருந்து மீளலாம்.

குறைந்த பட்சம் ஒரு போட்டியில் டிரா செய்தாலும், எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்