இந்திய அணிக்கு விளையாடுவோம் என்ற நம்பிக்கை போச்சு! ஐபில் தொடரில் கலக்கிய இளம் வீரர் வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு சுத்தமாகவே இல்லை என்று, இளம் வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் கூறியுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தவர் ஸ்ரேயாஷ் ஐயர். அதுமட்டுமின்றி டெல்லி அணியிலிருந்து காம்பீர் விலகியவுடன் அந்தணிக்காக ஒரு நல்ல தலைவனாக இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது.

இவர் ஏற்கெனவே இந்திய சீனியர் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 210 ஓட்டங்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 88 ஓட்டங்கள் என ஆட்டம் சிறப்பாகவே அமைந்திருந்தது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் அதிக ஓட்டங்களை நான் குவித்தாலும், தேசிய சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் எனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் பொறுமையாக இருப்பது கடினமாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிலையில் சீனியர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. சிறப்பான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடினால் ஆட்டத்திறன் மேலும் மேம்படும்.

என்னுடைய துடுப்பாட்ட திறமையை அணி நிர்வாகத்தினர் பார்க்கட்டும், கடந்த கால சாதனைகளை ஆய்வு செய்து பார்க்கட்டும், நான் எந்தவிதத்திலும் துடுப்பாட்டத்தில் மோசமாகச் செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers