இலங்கை அணி 2018-ல் எத்தனை கிரிக்கெட் தொடர்களை வென்றுள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி 2018-ல் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மற்றும் அதில் அடைந்த வெற்றி, தோல்வி குறித்து தெரியவந்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் (1-0) இலங்கை அணி இந்தாண்டு தொடக்கத்தில் வென்றது.

அதே போல அந்த அணிக்கு எதிரான டி20 தொடரையும் இலங்கை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

மார்ச் மாதத்தில் நடைபெற்ற நிதாஹஸ் கிண்ண முத்தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடியது.

இதில் டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இழந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers