இந்திய அணி வீரரின் ஸ்டம்பை தெறிக்க விட்ட பென்ஸ்டோக்ஸ்! ஆக்ரோசமாக கத்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுலின் விக்கெட்டை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்திய பின்பு ஆக்ரோசமாக கத்தியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களும், அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து பாண்டாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முயாமல் 161 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

வீடியோவைக் காண கிளிக் செய்யவும்........

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கத்தில் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுமுனையில் கே.எல் ராகுல் சீரான இடைவேளையில் பவுண்டரிகள் விளாசி மளமளவென ஓட்டங்கள் குவித்தார்.

எப்படியும் கே.எல் ராகுல் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 33 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸின் பந்தில் ஸ்டெம்ப்பை பறிகொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அப்போது கே.எ.ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய பின்பு ஸ்டோக்ஸ் ஆக்ரோசமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்