2007 ஞாபகம் இருக்கா பிராட்! சின்னப் பையன் ரிஷப் பாண்டை அவுட்டாக்கிவிட்டு அவர் செய்த செயல்

Report Print Santhan in கிரிக்கெட்
334Shares

இந்திய அணி வீரரான ரிஷப் பாண்டை அவுட்டாக்கியவுடன் இங்கிலந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிராட் சில வார்த்தைகள் சொல்லி அனுப்பி வைத்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இளம் வீரரான ரிஷப் பாண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதுதான் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய முதல் போட்டியிலே ரிஷப் பாண்ட் சிக்ஸருடன் தொடங்கினார்.

பேட்டிங்க், விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அவர் அவுட்டான பந்தை தவிர மற்ற பந்துகளை திறமையாக ஆடினார்.

தவறான துடுப்பாட்ட அணுகுமுறையால் ஸ்டூவர்ட் பிராட், ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தில் அவுட்டானார். காலை நகர்த்தாமல், பேட்டை மட்டும் விட்டு அடிக்க முயன்றதால், பேட்டின் உள்பக்கத்தில் எட்ஜாகி போல்டானார் ரிஷப் பண்ட்.

ரிஷப் பாண்டை போல்டாக்கியவுடன், பிராட் அவரை நோக்கி ஏதோ வார்த்தை விட்டார். ஆனால் ரிஷப் பாண்டோ அவுட்டான அதிருப்தியில் சென்றார்.

இளம்வீரரான ரிஷப் பாண்ட் பொதுவாகவே ஆக்ரோஷமான வீரர். அறிமுக டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து ஓட்டக் கணக்கை தொடங்கியபோதே இங்கிலாந்து அணி அதை அறிந்திருக்கும்.

அறிமுக போட்டியில் களமிறங்கிய வீரரை, அதுவும் ஆக்ரோஷமான மற்றும் திறமையான வீரரை பிராட், இப்படி வழியனுப்பியிருக்க கூடாது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரிஷப் பண்ட் இனிவரும் இன்னிங்ஸ்களில் ஆட வாய்ப்புள்ளது

ஏனெனில் கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்னத்தொடரில் யுவராஜ் சிங்கை இங்கிலாந்து அணி வீரர் பிளிண்டாப் மோதலில் ஈடுபட, அதற்கு அடுத்த ஓவரை வீசிய பிராட்டின் பந்து வீச்சை யுவராஜ் வெளுத்து வாங்கினார்.

அந்த ஓவரில் 6 பந்துக்கு 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அது போன்ற வீரர் தான் ரிஷப் பாண்டும் என்பதால், பிராட் ஓவரை அடித்து நொறுக்குவதற்கு ரிஷப்பாண்ட் காத்துக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்