இங்கிலாந்தில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோஹ்லி! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, சிறுவனின் வேண்டுகோளை ஏற்று செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இங்கிலாந்து மண்ணில் சாதித்து காட்டியது.

இந்த வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி, அதைத்தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சிறுவன் ஒரு விராட்..விராட் என்று கத்தி தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். இதையடுத்து கோஹ்லி அவரது தந்தை வைத்திருந்த போனை வாங்கி செல்பி எடுத்தார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இதே சுற்றுப்பயணத்தின் போது, கோஹ்லியை சந்திப்பதற்கு இங்கிலாந்து சிறுமி ஒருவர் வெகுநேரமாக காத்திருந்தார்.

ஆனால் கோஹ்லி அவரை சந்திக்காததால், இந்திய வீரர் பும்ராவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பான புகைப்படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers