இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தமிழக வீரர் அதிரடி நீக்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து தமிழக வீரர் முரளி விஜய், குல்தீப் அதிரடி நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது.

இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. இதில் பெரிய அளவில் சாதிக்காத முரளி விஜய், குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டு, இளம் பிரித்வி ஷா, விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

கோஹ்லி (கேப்டன்), தவான், ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், ஷார்துல் தாகூர், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹனுமா விஹாரி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்