ஒரே ஒரு தவறான பந்தால் இந்தியாவின் வெற்றியை 18 மணி நேரம் தள்ளிப் போட்ட பும்ரா! எப்படி தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா வீசிய ஒரு நோ பாலால் இந்தியாவின் வெற்றி 18 மணி நேரம் தள்ளிப் போனது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்றது, இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் 4-ஆம் நாள் முடிய வேண்டிய இப்போட்டியை பும்ராவில் 5-ஆம் நாள் வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நான்காம் நாளின் ஆட்டம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ரசிதை அவுட்டாக்க கிடைத்த வாய்ப்பை, பும்ரா நோ பாலாக வீசியதால், போட்டி 5-ஆம் நாள் வரை சென்றுவிட்டது.

இதனால் இந்தியாவின் வெற்றி 18 மணி நேரத்திற்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டது.

இந்திய அணியின் நம்பிக்கை வீரராக பும்ரா இருந்த போதிலும், அவர் இக்கட்டான சமயங்களில் இது போன்ற நோ பால் வீசி இந்திய அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் தலைவலியை ஏற்படுத்திவிடுகிறார்.

மேலும் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய போது கூட பட்லரை அவுட்டாக்க கிடைத்த வாய்ப்பு, அவர் நோ-பால் வீசியதன் மூலம் பறிபோனது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்