இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதற விட்ட பும்ரா! ஐந்து விக்கெட் எடுத்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான், முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த இவர், அடுத்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தியது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

அதே சமயம் இப்போட்டியின் போது ஒரு நோ பால் வீசி போட்டியை அடுத்த நாள் வரை இழுத்தடித்துச் சென்றதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்