நான்காவது டெஸ்டிலும் கோஹ்லி சதம் அடிப்பார்: இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலும், விராட் கோஹ்லி சதமடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் 30ஆம் திகதி சவுதம்டாப்டானில் தொடங்க உள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்த தொடரில் 440 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 73.33 ஆகும்.

இங்கிலாந்து தரப்பில் ஜானி பேர்ஸ்டோ 206 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கடந்த போட்டியில் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 97 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ஓட்டங்களும் எடுத்தார்.

இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டியிலும் கோஹ்லி சதமடிப்பாரா என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனிடம் டிவிட்டர் பக்கத்தில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அதிக வாய்ப்பு உள்ளதாக பதிலளித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்