நான்கு ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்: டி20யில் வரலாற்று சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் நான்கு ஓவர்களில் 23 பந்துகளை Dot வைத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் அணியும், கெய்ல் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய பார்படாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹோல்டர் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய செயிண்ட் கிட்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பிராண்டன் கிங் 60 ஓட்டங்கள் எடுத்தார்.

எனினும், பார்படாஸ் அணிக்காக விளையாடும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் சாதனை ஒன்றை செய்துள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர் அதில் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதாவது 24 பந்துகளை வீசிய அவர், அதில் 23 பந்துகளை Dot செய்தார். டி20 வரலாற்றில் இது மிகச் சிறந்த பந்துவீச்சாகும். அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இதுகுறித்து இர்பான் கூறுகையில், ‘டி20 போட்டி வரலாற்றில் சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அணி தோற்றதில் வருத்தம்தான். இந்த Pitch-யில் பந்து கொஞ்சம் அதிகமாக எழும்பியது. அதற்கு காரணம் என் உயரம். திருப்தியான ஆட்டமாக இன்றைய போட்டி இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...