வந்த முதல் பந்திலே இங்கிலாந்து வீரரின் ஸ்டம்பை தெறிக்கவிட்ட இந்திய வீரர் ஷமி! வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி, இங்கிலாந்து வீரர் பாரிஸ்டோவை தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி சவுத்தாம்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ஓட்டங்களும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 273 ஓட்டங்களும் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டை 48 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ஷமி வெளியேற்றினார்.

இவரைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் பாரிஸ்டோவ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஷமியிடம் ஸ்டெம்பை பறிகொடுத்து வெளியேறினார். அது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers