இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து: திணறும் கோஹ்லி படை

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணி 245 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய அணி திணறி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் படி அந்தணி முதல் இன்னிங்ஸில் 246 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 273 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து, 27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான குக் 12 ஓட்டங்களிலும், ஜென்னிங்ஸ் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மொயின் அலி 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பேர்ஸ்டோ ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

எனினும், பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அப்போது, ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர், ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களும், சாம் குர்ரன் 46 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இங்கிலாந்து அணி 271 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

AP

இதன்மூலம், இந்திய அணிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொல்லை தந்தார்.

அவர் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவானை 17 ஓட்டங்களிலும், புஜாராவை 5 ஓட்டங்களிலும் வெளியேற்றினார்.

லோகேஷ் ராகுல் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் அணித்தலைவர் கோஹ்லி 22 ஓட்டங்களுடனும், ரஹானே 19 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers