இந்தியா ஆசிய கிண்ணம் வெல்வது நிச்சயமா இவர் கைல தான் இருக்கு: பிரட் லீ சூசகம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய அணி ஆசிய கிண்ணம் வெல்வது ரோகித் சர்மா, ஷிகர் தவான் அளிக்கும் துவக்கத்தை பொறுத்து தான் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 14 வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர்15 முதல் 26 வரை நடக்கவுள்ளது.

இதில் ஐசிசி.,யின் முழுநேர உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இத்தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது.

தவிர, தகுதிச்சுற்று மூலம் ஹாங் காங் அணி தகுதி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி ஆசிய கிண்ணம் வெல்வது அணித்தலைவர் ரோகித் சர்மா, ஷிகர் தவான் அளிக்கும் துவக்கத்தை பொறுத்து தான் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரட் லீ கூறுகையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இல்லாத நிலையில், ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் அளிக்கும் துவக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி உள்ளது.

அணித்தலைவர் மற்றும் துணைக்கேப்டன் பொறுப்பு இவர்களுக்கு உள்ளதால் அதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

கோஹ்லி இல்லாத போது ரோகித் சர்மா ஒருவரால் தான் அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers