இலங்கை சுழலில் சிக்கி சின்னாபின்னமான இந்தியா: ஆசிய கிண்ணத்தை இழந்த கதை

Report Print Raju Raju in கிரிக்கெட்

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா தோற்றதை என்றும் மறக்க முடியாது.

ஆசிய கிண்ண 2008 தொடரில் ஆறு அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதி போட்டிக்கு இந்தியாவும், இலங்கையும் தகுதி பெற்றன.

இப்போட்டியில், இலங்கை முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஜெயசூர்யா அபாரமாக சதமடித்தார்.

அந்த அணி 273 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து ஆடிய இந்தியா, மென்டிஸ் காட்டிய சுழல் வித்தையை புரிந்து கொள்ளும் முன் வரிசையாக வீழ ஆரம்பித்தது.

அந்த போட்டியில் முத்தையா முரளிதரனும் இருந்தார். இரட்டை சுழல் தாக்குதலாக இருவரும் மாறி மாறி பந்து வீச இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். மென்டிஸ் ஆறு விக்கெட்கள் அள்ளினார். இறுதியில் இந்தியா 173 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்