விராட் கோலி உலகிலேயே மிகவும் மோசமானவர்: மைக்கேல் வாகன் கடும் விமர்சனம்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

உலகிலேயே ரிவியூ ஆப்சனை பயன்படுத்துவதில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தான் மோசமானவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 343 ரன்களை குவித்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இப்போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஜடேஜா பந்து வீசும்போது ஜென்னிங்ஸ் (9.2) மற்றும் அலஸ்டைர் குக்கிற்கு (11.6) நடுவர் விக்கெட் கொடுக்காததால் விராட் கோலி ரிவியூ கேட்டார். ஆனால் இருவரின் பேடும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இருக்கும்போது பந்து தாக்கியதால் ரிவியூ வாய்ப்பை இந்தியா இழந்தது.

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ரிவியூ கேட்பதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தான் உலகிலேயே மிகவும் மோசமானவர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்