இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாராவின் சாதனையை முறியடுத்து வரலாறு படைத்த குக்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வீரரான குக் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி 292 ஓட்டங்கள் எடுத்தது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் எடுத்து, 154 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

துவக்க வீரர் குக் (46), ரூட் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, குக் 76 ஓட்டங்கள் எடுத்த போது டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், 5-வது இடம் பிடித்தார்.

டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்திருந்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்ககாராவின் 12400 ஓட்டங்களை கடந்து அவரை பின்னுக்கு தள்ளி குக் 12,411 ஓட்டங்கள் எடுத்து தற்போது ஐந்தாம் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers