டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்: 4வது இடத்தைப் பிடித்த ஆண்டர்சன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மெக்ராத்துடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்டில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதன்மூலம் அவரது சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது. மேலும், டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் அவுஸ்திரேலியாவின் மெக்ராத்தை சமன் செய்துள்ளார் ஆண்டர்சன்.

மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 563 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன்(800 விக்கெட்டுகள்) முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே(708 விக்கெட்டுகள்) 2வது இடத்திலும், இந்தியாவின் அனில் கும்ப்ளே(619 விக்கெட்டுகள்) 3வது இடத்திலும் உள்ளனர்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers