அலெஸ்டர் குக்கிற்கு 33 பீர் பொத்தல்களை பரிசாக வழங்கிய ஊடகம்

Report Print Kabilan in கிரிக்கெட்

லண்டன் ஓவல் டெஸ்டில் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கிற்கு, ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் 33 பீர் பொத்தல்களை பரிசாக அளித்துள்ளனர்.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஓய்வு பெறுகிறார்.

முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 71 ஓட்டங்கள் எடுத்த குக், 2வது இன்னிங்ஸில் 147 ஓட்டங்கள் விளாசினார். இது அவருக்கு 33வது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.

இந்நிலையில், நேற்று குக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது 33 சதங்களை நினைவுகூறும் வகையில், ஊடகம் ஒன்றின் சார்பில் 33 பீர் பொத்தல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers