ஒற்றை ஆளாய் இங்கிலாந்தை தெறிக்க விடும் இந்திய வீரர் ராகுல்! அசத்தல் சதம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் அபார சதம் விளாசியுள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 464 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.

இந்திய அணி விரைவிலேயே முதல் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தொடக்க வீரரான ராகுல் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.

ரஹானே 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், ராகுல் ஒற்றை ஆளாய் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்து வருகிறார்.

முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டங்கள் எடுத்த விஹாரி, இம்முறை ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராகுல் 87 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, பென் ஸ்டோக்ஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை திணறடிக்க நினைத்தார்.

ஆனால், ராகுல் அதில் ஒரு பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடிக்க அது சிக்ஸராக மாறியது. அதன் பின்னர் பவுண்டரி ஒன்றை விளாசி சதத்தை பதிவு செய்தார். இது ராகுலுக்கு 5வது சதமாகும். ராகுலுக்கு பக்க பலமாக ரிஷாப் பண்ட் ஆடி வருகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers