இங்கிலாந்தை ஆட்டம் காண வைத்த ரிஷப் பந்த்: ஒரே சதத்தால் படைத்த சாதனைகள்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பந்த், குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நேற்று நடந்து முடிந்தது. 464 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 345 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியை தழுவியது.

இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 149 ஓட்டங்களும், ரிஷப் பந்த் 114 ஓட்டங்களும் விளாசினர். ரிஷப் பந்திற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் சதமாகும். இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

ரிஷப் பந்த் படைத்த சாதனைகள்

  • ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் ரிஷப் பந்த் இணைந்தார்.
  • டெஸ்டில் தனது முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவ், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் பந்த் இணைந்துள்ளார்.
  • மிகக் குறைந்த வயதில்(20) சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில், அஜய் ராத்ராவை தொடர்ந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆவார்.
  • அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஆசியா இல்லாத நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்